Home Blog

வீடியோ: யூசுப் பதான் ஆஹ் இது: சயீத் முஷ்டாக் போட்டியில் தலை குப்புற பறந்து பிடித்து அவுட் செய்தார்.

0

யூசுப் பதான் இந்திய அணிக்கு பினிஷெர் ரோல் வேர்ல்ட் கப் இல் அருமையாக செய்தார். அதே போல இன்று வரை ஐபிஎல் போட்டிகளில் இவர் களமிறங்கினாள் ஆட்டத்தின் போக்கை ஒரே ஓவரில் மாற்ற கூடியவர். ஆனால் சமீப காலமாக இவரால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் இந்திய அணியில் இவரால் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை.

இப்போது நடந்து கொண்டிருக்கும் சயீத் முஷ்டாக் அலி ட்ரோபி போட்டியில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார் யூசுப் பதான். நேற்று பரோடாவுக்கும் கோவாவுக்கும் நடந்த போட்டியில் அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும் பீலடிங்கில் யாரும் எதிர் பாராத விதமாக தாவி ஒரு கேட்சை பிடித்து அசத்தியுள்ளார்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது

யூசுப் பதான் நிறைய முக்கியமான நேரங்களில் கேட்ச்களை தவறவிட்டதை நாம் பார்த்திருப்போம். ஆதனால் இவர் இப்படி பறந்து பிடித்திருப்பது ஆச்சர்யமாக தான் பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் பரோடா அணியால் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை, தோல்வியே அடைந்தனர்.