உலக கிரிக்கெட் வரலாற்றில் இவர்தான் சிறந்த பினிஷெர். மைகேல் ஹஸ்ஸி அதிரடி

265

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக் ஹஸ்ஸி கிரிக்கெட்டில் இதுவரை இருந்த வீரர்களில் யார் சிறந்த பினிஷர் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பொது மக்களை போல் விளையாட்டு வீரர்களும் சரி சினிமா பிரபலங்களும் சரி. யார் ஆகா இருந்தாலும் வீட்டிலே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைவேளையில் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.

உலகில் தலைசிறந்த பினிஷெர் என்றால் அது டோனி என்று தான் குறிப்பிடவேண்டும் என்று ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். மைக் ஹஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார் (2014 தவிர). ஆதலால் டோனியை பற்றி முழுமையாக அறிந்தவர் என்றே குறிப்பிடலாம். மேலும் ஆஸ்திரேலியாவில் மைக்கேல் பெவனும் ஒரு சிறந்த பினிஷெர் தான். இதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா வீரரே டோனியை சிறந்த பினிஷெர் என்று கூறி இருப்பது டோனி ரசிகர்களிடையே பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதைப்பற்றி ஹஸ்ஸி கூறுகையில் தோணியிடம் இருந்து சென்ற காலங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முதலாவது அவரின் தன்னம்பிக்கையே, முக்கியமாக அணி விக்கெட்டுகள் இழந்து சரிவில் இருக்கும் போது நேர்த்தியாக விளையாடி கடைசி ஐந்து ஓவரில் ஆட்டத்தை சூழ்நிலைக்கேற்ப கொண்டு செல்வது அவரின் பலம். “இவ்வாறு ஹஸ்ஸி கூறி இருக்கிறார்”

ஐபிஎல் 2020 போட்டியை டோனி துண்டு சீட்டாக கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எல்லாராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் Corona வைரஸால் இந்த ஆண்டு ஐபிஎல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றே கூற வேண்டும். டோனியின் கிரிக்கெட் பாதையை பற்றி அவருக்கு மட்டுமே தான் தெரியும். இதில் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.