காதலை நிராகரித்ததால் முகத்தை இழந்த பெண், மீண்டும் தேடி வந்த காதல்: ஒரு நெகிழவைக்கும் சம்பவம்!

0
45

இந்தியாவை சேர்ந்த ஒடிஷாவில் வாழும் பிரமோதினி (28 வயது), அவர் சிறுமியாக இருக்கும்போது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த சிறுமியின் முகத்தில் அமிலத்தை (Acid) வீசிச்சென்றார் ஒரு அரக்கன்.

அச்சிறுமியின் முகம், கைகள் சிதைந்ததோடு, அவரது கண் பார்வையும் பறிபோய்விட இருளிலே வாழ்ந்துவந்தார் அவர்.

13 வருடங்கள் கழிந்த நிலையில், பிரமோதினி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய ஒருவரின் நண்பர் சரோஜ் சாஹூ (29 வயது).

சரோஜ் சாஹூ தன் நண்பருடன் பிரமோதினி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு வந்தபோது பிரமோதினியை சந்தித்திருக்கிறார். பிரமோதினியை கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையையே விட்டிருக்கிறார் சாஹூ.

இருவருக்கும் காதல் மலர, இருவர் குடும்ப சம்மதத்துடன் இம்மாதம் மார்ச் 1 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அவர்களது திருமணத்தில், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு மீண்டு வாழும் ஆறு பேர் உட்பட, ஆயிரம் விருந்தினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

தனக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை வந்த பின்பு தான் முதன் முதலாக சாஹூவைப் பார்த்ததாக தெரிவிக்கிறார் பிரமோதினி.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே, சாஹூ என்னை நேசிக்கிறார் என்று கூறும் பிரமோதினி, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அவர் எப்போதும் என்னிடம் சொல்வதுண்டு என்கிறார். கணவனும் மனைவியுமாக, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here