கிரிக்கெட் விளையாடாவிட்டாலும் தன் கடமையை சரியாக செய்யும் தல தோனி

289

ஐபிஎல் 2020 போட்டியை டோனி துண்டு சீட்டாக கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எல்லாராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் Corona வைரஸால் இந்த ஆண்டு ஐபிஎல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றே கூற வேண்டும். டோனியின் கிரிக்கெட் பாதையை பற்றி அவருக்கு மட்டுமே தான் தெரியும். இதில் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

இந்நிலையில் தோனி தனது அகாடமியில் நடக்கும் விஷயங்களை கூர்ந்து ஆலோசித்து வருவதாக தோனி அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சத்ரஜித் லஹிரி கூறிருக்கிறார்.

ஒவ்வொரு வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பதிவேற்றப்படும் அனைத்து தளத்திலும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் குறைந்தபட்சமாக 10000 பார்வையாளர்கள் வருகின்றனர்” என்றார்.

தமிழக வீரரான அஷ்வினும் சென்னையில் கிரிக்கெட் அகாடமி ஒன்று நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறார்களாம். அதில் அஸ்வின் அவ்வப்போது கலந்துகொண்டு சிறுவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் வெகு விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அணைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.