உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொடூர நோயாக வலம்வந்து கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முனைப்புடன் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளில் ஒன்று ஸ்பெயின். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டவர் நடிகை ஷ்ரேயா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த சிவாஜி படம் மூலம் தனது மார்க்கெட்டை அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு சரியாமல் பார்த்து கொண்டார்.
எனினும் ஹீரோயின்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கொடிகட்டி பார்ப்பது ஒரு சிலர் மட்டுமே. ஸ்ரேயாவும் அதற்கு தனி விலக்கு அல்ல. அவருக்கும் படவாய்ப்புகள் இல்லாமல் சில நேரங்களில் எங்கு வசிக்கிறார் என்று கூட ரசிகர்களால் கண்டு அறிய முடியாமல் போனது. திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தனது காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.தற்போது தனது கணவருடன் ஸ்பெய்ன் நாட்டில் வசித்து வரும் ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதால் அவரை மருத்துவர்கள் சோதனை செய்து உள்ளார்கள்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், என் கணவர் ஆண்ட்ரவிற்க்கு உலர்ந்த இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்கத் தொடங்கியது. இதனால் நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு விரைந்தோம், ஆனால் மருத்துவர்கள் பதற்றமடைந்து எங்களை வெளியேறும்படி வற்புறுத்தினர். அவருக்கு கோவிட்19 இல்லையென்றாலும், அவர் இங்கேயே இருந்தால் அவர் அதைப் பெறுவார் என்று மருத்துவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.