கொரோனா நிவாரண நிதிக்கு நம்ம சுந்தர் பிச்சை கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

333

உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொடூர நோயாக வலம்வந்து கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முனைப்புடன் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

நாடு முழுவதும் வெவ்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண நிதி அளித்த வண்ணம் இருக்கின்றனர். தொழிலதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்களால் முடிந்ததை நிதி உதவி அளித்திருக்கிறார்கள். ரதன் டாடா 1500 கோடி ருபாய் அளித்து இந்தியர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தமிழரும் ஆன சுந்தர் பிச்சை தன் பங்கிற்கு இந்தியாவுக்கு 5 கோடி ருபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.