கோஹ்லி, ரெய்னா, யுவராஜ், ஜடேஜா.. இவர்களில் சிறந்த பீல்டர் இவர் தான்

306

இந்திய கிரிக்கெட் அணி எப்போதும் பேட்டிங்குற்கே பெரிதும் பெயர்ப்போனது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்சிலும் எதிரணியின் 10 விக்கெட்களையும் எடுக்கும் வல்லமை கொண்டுள்ளது இந்திய பந்துவீச்சு குழு.

இதற்க்கு முக்கிய காரணம் விராட் கோஹ்லி சுழற் பந்துவீச்சார்களை குறைவாக உபயோகித்து வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியதே காரணம். உலக கிரிக்கட்டில் இந்திய அணி பந்துவீச்சு ஆஸ்திரேலியா போன்ற தரத்தை இப்போது பெற்றுள்ளது.

பீல்டிங் பொறுத்தவரை இந்திய அணி எப்போதும் பின் தங்கியே இருந்துள்ளது. எனினும் 4-7 வீரர்கள் வரை 11 பேரில் நல்ல பீல்டர்களாக இருப்பார்கள் ஒவ்வொரு போட்டியிலும். 2002 முதல் இதே வழக்கமாக தான் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் செல்லும்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹோக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ஒருவர் யுவராஜ்சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்களில் யார் சிறந்த பீல்டர் என்று கேள்வி எழுப்பினார்.

நான் பந்து வீசும் பொழுது இவர்கள் நால்வரில் யார் உள்வட்டத்தில் பீல்டிங் செய்தாலும் மகிழ்ச்சியே. ஒருவர் மட்டும் என்றால் ஜடேஜா தான் என்று பதிலளித்தார் பிராட் ஹோக்.