98 வயதில் தன்னம்பிக்கையுடன் அயராது உழைக்கும் இவரை கவுரவித்து பாராட்டிய அரசாங்கம்

0
49

உத்திர பிரதேசத்தை சேர்ந்த 98 வயதான மனிதர் தற்போது உழைப்புக்கு உதாரணம் மற்றும் எடுத்துக்காட்டாக இணையம் முழுவதும் வலம் வருகிறார். இவரை பற்றியான முழு விவரம் இதோ

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் வசிக்கும் 98 வயதான விஜய்பால் சிங், இந்த தள்ளாத வயதிலும் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக் கூறி சுயமாக உழைத்து சம்பாதித்துவருகிறார்.

விஜய்பால் சிங் ரேபரேலியில் தினமும் வேகவைத்த சென்னா சாட் (கடலை மசாலா) வியாபாரம் செய்து சம்பாதித்துவருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்துவரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பால் சிங் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

எதற்கு இந்த தள்ளாத வயதில் வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டால் அவர் கூறும் பதில், “எனக்கு ஒரு பெரிய குடும்பம் இருக்கின்றது. ஆனால், நான் வேலை செய்யாவிட்டால் என் உடல் விறைத்துவிடும். அதனால் நான் தொடர்ந்து வேலை செய்தால், 12 மாதங்களுக்கும் நான் ஆரோக்கியமாக இருப்பேன்” எனக் கூறுகிறார்.

விஜய்பால் சிங் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இத்தகைய வயதில் தன்னம்பிக்கையுடன் உழைப்பதற்க்காக உத்தரபிரதேச அரசால் கவுரவிக்கப்பட்டார்.

ரூ.11,000 ரொக்கம், வாக்கிங் ஸ்டிக், ரேஷன் கார்டு மற்றும் ஒரு பொன்னாடையை அனுவித்து மாவட்ட நீதவான் வைபவ் ஸ்ரீவாஸ்தவா கவுரவித்துள்ளார். அவரை, உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூக வலைத்தளங்களில் பாராட்டியதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here