ஏசி மூலமும் பரவும் கொரோனா.. ஒரே நேரத்தில் 3 குடும்பத்தினருக்கு நோய் தொற்று உறுதி…

560

உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொடூர நோயாக வலம்வந்து கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முனைப்புடன் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் சீனா ஒரே உணவகத்தில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு தரப்பு குடும்பத்தினருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வாங்ஷோவ் என்ற பகுதியில் உள்ள இந்த உணவகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த பொழுது அதே நேரத்தில் வேறு இரு குடும்பத்தினரும் உணவகத்திற்கு வந்துள்ளனர்.

இவர்களிடையே வைரஸ் பரவாமல் இருக்க போதுமான இடைவெளி விட்டே தான் உணவருந்தியதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அங்கு ஏசி இயங்கி கொண்டிருந்ததால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் இரும்பல் அல்லது அவரின் சுவாச காற்று அந்த ஏசி மூலம் 10 பேரை பாதித்துள்ளது.

இதையடுத்து அந்த உணவகம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உலக முழுவதும் மக்களை மேலும் பீதியில் உறைய செய்துள்ளது.