இன்று தமிழ் சினிமாவை கலக்கும் காமெடி நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், ரோபோ ஷங்கர், DD மற்றும் வெகு சிலர் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள்தான். இதே வரிசையில் தனக்கென தொகுப்பாளர் துறையில் அந்த தொலைக்காட்சியில் டாப்பில் உள்ளவர் மகாபா ஆனந்த்.

ஒரு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதில் தொகுப்பாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ம கா பாவும் அதில் வல்லவர் என்றே கூற வேண்டும். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரும் பிரியங்காவும் சொல்லவா வேண்டும், இருவரும் சேர்ந்தாள் ஒரே ரகளையாக தான் காணப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும்.
இதுமட்டும் இல்லாமல் ம கா பா வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். வானவராயன் வல்லவராயன் படத்தில் நடிகர் கிருஷ்ணாவுடன் இனைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது போக கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சுவர்களில் வால் போஸ்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் ம கா பா. சினிமா காரம் காபி மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார். ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல மப்புல பாடல் ஒலிப்பரப்பிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே இவர் தான்.
இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் மிகப் பெரிய காரணம் எனலாம். தனது மனைவி பற்றியும் மகள் பற்றியும் அடிக்கடி மேடைகளில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை அவருக்கு விருது வழங்கிய போது தனது மனைவிக்கு கண்ணீர் உடன் நன்றி கூறி இருந்தார். அவரின் குடும்ப புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.





