மேக்கப் இல்லாமல் சின்ன பெண் போல் இருக்கும் நயன்தாரா.! லேடி சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா!

19

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தது முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கும் அளவுக்கு நயன்தாரா உயர்ந்தது அனைவரும் அறிந்ததே. அவர் நடித்த நிறைய திரைப்படங்களில், ஹீரோவிற்கேற்ப அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இன்று வரைக்கும் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகின்ற நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதேசமயம் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் கூடிய சீக்கிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நயன்தாராவை அதிகம் மேக்கப் போடாமல் பார்த்திருக்க முடியாது, அந்த வகையில் நயன்தாரா ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு காருக்குள் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும், நயன்தாரா மேக்கப் போடாமல் மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.