விக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும் புகைப்படம்!!

0
354

2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் – படத்தின் கதாநாயகி நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிந்து விக்னேஷ் சிவன், “என் அழகான ஸ்டோரிக்கு இப்போது ஐந்து வயது. உன்னோடு காதலால் நிரம்பிய அழகான தருணங்களைக் கொண்ட 5 ஆண்டுகள். உன்னுடைய அளப்பரிய காதலோடும் அன்போடும் ஒவ்வொரு தினமும் காதலர் தினமே” என்று தெரிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் மேலும் ஒரு படத்தில் இணையவுள்ளனர், இந்த படத்தை விக்னேஷ் சிவனே தனது ரவுடி பிக்சரஸ் தயாரிப்பில் வெளியிட உள்ளார். இது அவரே தயாரிக்கும் முதல் படம்.

இது ஒரு பக்கம் இருக்க அன்னையர் தினமான நேற்று விக்னேஷ் சிவன் தனது தாய் மற்றும் சகோதரியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவின் மாமியாரா இவங்க என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here